Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இந்த 8 வகையான பெண்களிடம் உஷாரா இருங்க...ஆண்களே!.

இந்த 8 வகையான பெண்களிடம் உஷாரா இருங்க..ஆண்களே!.

அலுவலகத்தில்8 வகையான'அல்ப்பை'பெண்கள் இருப்பதாக மெல்போர்னைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரும், எழுத்தாளருமான மெரெடி ஃபுல்லர் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பல தரப்பட்ட பெண்கள் பணியாற்றுவார்கள். இதில் 8 வகையான 'அல்ப்பை' பெண்கள் உள்ளனர் என்று மெல்போர்னைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரும், எழுத்தாளருமான மெரடித் ஃபுல்லர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வொர்க்கிங் வித் மீன் கேர்ள்ஸ் என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அந்த 'அல்ப்பை'களிடம் சற்று ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். அந்த 8 வகை அல்ப்பைகள் யார் யார் என்று பார்ப்போம். 

தலைக்கனம் பிடிச்சது

சில தலைக்கனம் பிடித்த பெண்கள் அலுவலகத்தில் உள்ள யாரையும் கண்டுகொள்ள மாட்டார்கள். 

சதா குறைபாடுவது 

சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உங்கள் வேலையில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். 

வாயாலே பாயாசம்

சில பெண்கள் வாயாலே ஊருக்கு பாயாசம் காய்ச்சி கொடுக்கும் அளவுக்கு இனிப்பாக பேசுவார்கள். ஆனால் உண்மையில் இரட்டை முகம் உடையவர்கள். 

நான் தான் 

சில பெண்கள் நான் தான் ஸ்டார் நீ வேலைக்காரன் என்ற நினைப்பில் இருப்பார்கள். 

விளாசல் பார்ட்டி 

சில பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கத்திக் கொண்டே இருப்பார்கள். 

பொய்க்கோழி

சில பெண்கள் தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்வார்கள். அவர்களை எப்பொழுதும் நம்பவே கூடாது. 

போட்டி

சில பெண்கள் எதற்கெடுத்தாலும் போட்டி போடுவார்கள். 

ஃபிராடு

சில பெண்கள் தங்களின் வேலையை அடுத்தவர்களை வைத்து செய்து முடித்துவிட்டு அதை தாங்கள் செய்ததாகக் கூறுவார்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top