Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரேபீஸைப் பரப்பும் வெறி நாயை எப்படி அறிவது..? (எச்சரிக்கை தகவல்)

ரேபீஸைப் பரப்பும் வெறி நாயை எப்படி அறிவது..? (எச்சரிக்கை தகவல்)

சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி..? 

கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறிபிடிக்கும். தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிராய்லர் கோழிக்கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெறி நாயை (ரேபீஸைப் பரப்பத் தயாராக இருக்கும் நாய்கள்) இனம் கண்டு கொள்ள - 

நோயினால் தாக்கப்பட்ட நாய்கள் வழக்கத்தைவிட பரபரப்பாய் அலையும் அல்லது பரம சாதுவாய் உட்கார்ந்தே இருக்கும். 

உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடும்.

மனிதர்களிடம் பழகும்போது "உர்ர்ர்..' மயம்தான். 

இடைவிடாமல் குறைத்துக் கொண்டே இருக்கும். 

ஒரு கட்டத்தில் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கும். 

வழியில் கிடக்கும் பொருட்களை (மரம், கல் உட்பட) கவ்விக் கடித்துக் குதற ஆரம்பிக்கும். 

வாயிலிருந்து எச்சில் வடிந்துகொண்டே இருக்கும். 

கீழ்த் தாடை தொங்கிய நிலையில் நாக்கு வெளியே தள்ளியபடி இருக்கும்

இவ்வளவு அறிகுறிகளும் ஏற்பட்ட பிறகு நான்கிலிருந்து பத்து நாட்களுக்குள் நரம்புகள் செயலிழந்து போய்விடும். அப்புறம் நாய் இறந்து விடும்....!

வெறிநாய்க் கடி குறித்து சில விழிப்புணர்வுக் குறிப்புகள் 

வெறிநாய் கடிக்கும்போது மேல் தோல் கிழியாவிட்டால் மேல் தோலுக்கு கீழாக காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்பகள் நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். 

ஒருவேளை கடிக்கும்போது மேல் தோல் கிழிந்தாலும் மேற்கூறிய நிலைமைகளுடன் வெறி நோய் தொற்றக்கூடும். நோய் தொற்றியதற்கான அடையாளங்கள் 

காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல். காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல் · வலி தோன்றுதல் · சீழ் வெளியேறுதல் · காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல் · நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்) · காய்ச்சல்  விரல்களை நீட்டவோ அல்லது மடக்கவோ இயலாமை. · விரல் நுனிகளில் உணர்வுகள் இழத்தல், ·மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி..


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top