Daytamil » Home | English | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


காரின் டயருக்குள் சிக்கிய ''தல'' தலைக்கு வந்தது காலோட போச்சி .!!


நடிகர் அஜீத்குமார் இப்போது விஷ்ணு வர்தன் டைரக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜீத்–நயன்தாராவுடன், ஆர்யா, டாப்சியும் நடிக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. 

இந்த படத்துக்காக நேற்று ஒரு பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போன்ற காட்சியில் ‘டூப்’பை பயன்படுத்தாமல், அவரே நடித்தார். 

 அப்போது அவருடைய வலது கால் காரின் டயருக்குள் மாட்டிக் கொண்டது. அவருடைய வலது கால் பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அஜீத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அஜீத் வலியை பொறுத்துக் கொண்டு, அந்த சண்டைக்காட்சியில் நடித்தார்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top